மரம் நண்பர்கள் சார்பில் வெட்டப் பட்ட மரத்திற்கு ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்
புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகே மரம் நண்பர்கள் சார்பில் வெட்டப் பட்ட மரத்திற்கு ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கஜா புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் சாலைகளில் ஓரங்களில் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்து புதுக்கோட்டை மாவட்டமே வெட்டவெளியாக காட்சிதந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமை கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கஜா புயலினால் வேருடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் மரங்கள் சாய்ந்தது அந்த நிலையை மாற்ற வேண்டும் என கருதி புதுக்கோட்டையில் மரம் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சாலை ஓரங்களில் மரம் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதன் விளைவாக, புதுக்கோட்டை கீழ ராஜவீதி, மேலராஜவீதி, பிருந்தாவனம், பழனியப்பன், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது மரங்கள் நன்றாக வளர்ந்து பொதுமக்களுக்கு நிழல் தந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் கடைகளுக்கு முன்பாக வளர்ந்து நிற்கும் மரங்களை, ஒரு சில காரணத்தைக் கூறி பிருந்தாவனம் குண்டுக் கார தெரு , கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினம்தோறும் சாலையோரங்களில் நிழலுக்காக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டி விடுகின்றனர்.
இதனை கண்டித்து மரம் நண்பர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், இன்று புதுக்கோட்டை நகர பகுதிகளில் மரங்களை வெட்டுவதை தடுக்கும் விதத்தில் மரம் நண்பர்கள் 30க்கும் மேற்பட்டோர் வெட்டப்பட்ட மரத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் குண்டு கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கைகளில் மரங்களை வெட்டக்கூடாது என விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்து வெட்டப் பட்ட மரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து இதுபோன்ற சாலை ஓரங்களில் நன்கு வளர்ந்து பொதுமக்களுக்கு நிழல் தரும் மரங்களை வெட்டக் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்வில் மரம் நண்பர்கள் அதன் நிர்வாகிகள் கண்ணன், மருத்துவர் எட்வின், சமூக ஆர்வலர் விஸ்வநாதன் உள்ளிட்ட மரம் நண்பர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu