தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு இறப்பு
கோடைக்காலம் ஆரம்பித்ததால் தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகள் ஊருக்குள் பிரவேசிக்கின்றன. இவ்வாறு விலங்குகள் ஊருக்குள் வரும்போது பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன.
வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு அங்கு உள்ள குட்டைகளில் நீர் இல்லாததால் நீரை தேடி முயல், மான்,நரி போன்றவை ஊருக்குள் வரும்போது நாய்கள் கடித்து காயங்கள் ஏற்பட்டு இறந்து விடுவதும். சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறந்து விடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
அதேபோல் மாத்தூர்- ஆவூர் சாலையோரத்தில் சிங்கதகுறிச்சி பாம்பாட்டி அய்யனார் கோவில் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று இறந்துவிட்டது.
உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வனவிலங்குகளின் இறப்பை தடுப்பதற்கு தண்ணீர் தொட்டி அமைக்க தர வேண்டும் என்ன வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu