உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை-சட்டத்துறை அமைச்சர்

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை-சட்டத்துறை அமைச்சர்
X

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

பேரறிவாளனை போன்று சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினி ஆகியோர் பரோல் வேண்டி விண்ணப்பித்தால் அரசு பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை போன்று சிறையில் உள்ள முருகன் மற்றும் நளினி ஆகியோர் பரோல் வேண்டும் என்று விண்ணப்பித்தால் அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில. 93 லட்ச ரூபாய் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த மையத்தில் ஒரு மணி நேரத்தில் 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இனி இருக்காது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 93 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மையம் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 200 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளது.

நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு இன்று நீதித் துறை சார்பாக எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது முழுக்க முழுக்க நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் தேர்வு நடைபெறுகிறது. வெளிப்படைத் தன்மையோடு எந்தவித முறைகேடுகளும் இடம் கொடுக்காமல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள பேரறிவாளன் அவரது உடல்நிலை காரணமாகவும் தொடர் சிகிச்சை பெறுவதாகவும் தான் பேரறிவாளனின் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இதே வழக்கில் சிறையில் உள்ள நளினி முருகன் ஆகியோர் தங்களது உடல் நிலை குறித்து அவருடைய உறவினர்கள் பரோலில் விடுதலை செய்வதற்கு விண்ணப்பித்தால் தமிழக அரசு அவர்களை பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்.

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்கக் நடவடிக்கை எடுப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.அதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவார் என அவர் தெரிவித்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!