இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல மயான பாதை-புதுக்கோட்டை மாவட்ட புலம்பல்
இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல மயான பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாக பிரேதத்தை தூக்கிச் செல்லும் அவலம்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா களபம் கிராமத்தில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் . ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த இம்மக்களுக்கு மயான பாதை இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தாங்கள் இடுகாட்டிற்கு மயான பாதை வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வரும் பொதுமக்கள் தங்கள் ஊரில் இறந்த சின்னப்பா மனைவி பாப்பாத்தியை அடக்கம் செய்வதற்கு இன்று விளை நிலங்களின் வழியே இறுதி ஊர்வலம் நடத்த வேண்டிய அவலம் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். கடந்த 40 ஆண்டு காலமாக இக்கோரிக்கையை நிறைவேற்ற போராடி வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் வேண்டுகோளை காணொளி வாயிலாக முன் வைக்கின்றனர்.
விளை நிலங்களின் வழியே பிரேதத்தை எடுத்துச் செல்வதால் விளைநிலங்கள் சேதம் ஏற்படுவதுடன் விளைநிலங்களை பயிர் செய்து வரும் அந்த நிலத்தின் விவசாயிகளுடன் தகராறு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu