திருச்சி-காரைக்குடி இடையே மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்..!

திருச்சி-காரைக்குடி இடையே மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்..!
X

மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி. 

இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கும் என்று ரயில்வே துறையினர் தகவல்.

மத்திய அரசு தற்போது அனைத்து ரயில் பாதையையும் மின்சார மையமாக்கி ரயில்களை இயக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக டீசல் பயன்பாட்டை குறைப்பதற்காக மின் ரயில் பாதை அமைக்கும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்னக ரயில்வே பல்வேறு இரட்டை ரயில் பாதைகளை மின் பாதைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து அதில் 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக திருச்சி - காரைக்குடி, காரைக்குடி -மானாமதுரை, மானாமதுரை - ராமேஸ்வரம், வரையிலான அகல ரயில்பாதை தற்போது மின் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது

இதில் காரைக்குடி முதல் மானாமதுரை வரை பணிகள் முடிவடைந்துவிட்டன.

திருச்சி -காரைக்குடி, மானாமதுரை - ராமேஸ்வரம் ஆகிய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திருச்சி முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதையில் தற்போது மின் பாதைகளாக மாற்றும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி முதல் புதுக்கோட்டை வரை பணிகள் முடிவடைந்துவிட்டன தற்போது புதுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மின் பாதைகளாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து இந்த பாதையில் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது தென்னக ரயில்வே சார்பில் பல இடங்களில் மின்சார ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகள் வரும் 2023 ஆண்டிற்குள் முடிவடைந்து விடும். இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இந்த பாதையில் மின்சார ரயில் ஓடத் தொடங்கினால் ரயில்வே துறைக்கு ஓர் ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags

Next Story