அறந்தாங்கி அருகே மதுபோதையில் இளைஞர் ஊற்று குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

அறந்தாங்கி அருகே மதுபோதையில் இளைஞர்  ஊற்று குளத்தில்  மூழ்கி  உயிரிழப்பு
X

அறந்தாங்கி அருகே மதுபோதையில் அஜித் என்ற  இளைஞர் நீரில் மூழ்கி  உயிரிழந்த ஊற்று குளத்தில் வேடிக்கை பார்க்க  கூடிய பொதுமக்கள்

போதை தலைக்கேறிய நிலையில், ஊற்றுக்குழியில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிச்சென்ற அஜித், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை

மதுபோதையில் ஊற்றுக் குழிக்குள் இறங்கியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மகன் அஜித் (21) இவர் பஞ்சர் கடை நடத்திவருகிறார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொற்க்குடையார் கோவில் அருகே உள்ள ஊற்றுக்குழி ஓரத்தில் அஜித் மது அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில், ஊற்றுக்குழியில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற அஜித், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக தேடி அஜித்தின் சடலத்தை மீட்டுள்ளனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!