சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு:  2 பேர் படுகாயம்
X
பின்புறம் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார்

ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள கோடை குடி பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் மனைவி ரேவதி (36). இவர் மீமிசல் பகுதிக்கு சென்றுவிட்டு, பின்பு அங்கிருந்து ஊருக்கு ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி வந்துள்ளார். ஷேர் ஆட்டோவில் இவருடன் சேர்த்து ஐந்து பேர் பயணித்துள்ளனர். ஷேர் ஆட்டோவை மீமிசலை அடுத்த கோபாலபட்டினம் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (53) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆட்டோ பாலகுடி அருகே வந்து கொண்டிருக்கும்போது இவர்களுக்கு முன்னால் சென்ற வாகனம், பிரேக் திடீரென்று பிரேக் பிடித்து நிறுத்தியுள்ளனர்

இதனால், ஆட்டோ டிரைவர் அந்த வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக, ஆட்டோவை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்பொழுது, பின்புறம் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியதியதில் அதில் பயணம் செய்த ரேவதி, தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசார் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு, மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ரேவதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து மணல்மேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள கீழ மஞ்சக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கருப்பையா (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story