மின்விளக்கு வசதி இல்லாமல் தவிக்கும் மாணவிகளுக்கு ரெட் கிராஸ் உதவி
மின்விளக்கு வசதி இல்லாமல் படிப்பதற்கு கஷ்டப்பட்ட குடும்பத்திற்கு ரெட் கிராஸ் அமைப்பினர் உதவி செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடி வயல் கிராமத்தில் கணவனைப் பிரிந்து 4 பெண் குழந்தையுடன் வசிக்கும் மாரிக் கண்ணு என்பவருக்கு ஆலங்குடி இந்தியன் ரெட்கிராஸ் சார்பாக மாணவிகளின் படிப்பு நலன்கருதி அவரது குடிசை வீட்டிற்கு சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தியன் ரெட்கிராஸ் ஆலங்குடி கிளை செயலாளர் முருகன். துணை சேர்மன் டாக்டர் முத்தையா. பொருளாளர் ஜெயச்சந்திரன். துணை பொருளாளர் முருகேசன். துணைத்தலைவர் முத்துராமன் ஆசிரியர். செயற்குழு உறுப்பினர் சிவானந்தன் ஆகியோர் கூத்தாடி வயல் கிராமத்தில் குடிசையில் இருக்கும் மாரிக்கண்ணு குடும்பத்தினருக்கு சோலார் விளக்கு வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu