ஊருக்குள் காட்டெருமைகள், அச்சத்தில் கிராம மக்கள்

அறந்தாங்கி அருகே காட்டெருமைகள் திடீரென ஊருக்குள் பகுந்தது. இதனைப் பார்த கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அறந்தாங்கி தாலுகா எட்டியத்தளி, மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை இரண்டு காட்டு எருமைகள் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மாடுகளை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

கூச்சலிட்டதையடுத்து மாடுகள் அருகே இருந்த தென்னந் தோப்பிற்க்குள் புகுந்துள்ளது. சுமார் 8 அடி உயரமுள்ள காட்டெருமைகள், தோட்டத்திற்க்காக போடப்பட்டுள்ள வேலிக்கல்லுக் கால்களை சாதாரணமாக தாண்டிச் சென்றுள்ளது.

மேலும் கல்லுக்கால்களை தலையால் முட்டியும் உடைத்துள்ளது. மேலும் மாடுகள் ஒரே தோட்டத்தில் நில்லாது ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அச்சத்தில் ஆழ்ந்த பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மாடுகளைத் தேடிப்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை பார்த்த மக்கள் தெரிவிக்கையில் மாடுகளை இதுவரை பார்த்திராத அளவில் விஸ்தாரமாகவும், முரட்டுத்தனமாகக் காணப்பட்டது.

வேலிக்கற்களை சாதாரணமாக உடைத்து தள்ளியது, இதனைப் பார்த்தால் மிகவும் அச்சமாக உள்ளது எனவே வனத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மாடுகளைப் பிடித்து, அதற்கு உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil