அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்
X

 அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செந்தமில் நகரில் சித்திரவேல் என்பவர் வீடு கட்டி வருகிறார்.அவர் வீட்டு மேற்கூரை அமைப்பதற்கான காங்கிரிட் வேலை நடைபெற்று வருகிறது.

அங்கு வேலை பார்த்த கொத்தனார்கள் மற்றும் சித்தாள்கள் உள்ளிட்ட தொழிலாளிகளுக்கு அறந்தாங்கியில் உள்ள தனியார் பிரியாணி ஹோட்டலில் நேற்று 40 கோழி பிரியாணி ஆர்டர் செய்து வாங்கி கொடுத்துள்ளார்.

இன்று காலை முதல் இந்த கோழி பிரியாணியை சாப்பிட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. பதறிபோன தொழிலாளிகள் மற்றும் குடும்பத்தார்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு வந்தபின்தான் மற்றவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு இங்கு வந்துள்ளது தெரியவந்தது. தற்பொழுது 41நபர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 மற்றும் 12 வயதுடைய பெண் குழந்தைகள் இருவரும்,8 மற்றும் 14 வயதுடைய ஆண் குழந்தைகள் இருவரும் அடங்குவர். இன்னும் தொடர்ந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது

தற்பொழுது அறந்தாங்கி கோட்ட மாவட்ட துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அறந்தாங்கி கோட்டாச்சியர் சொர்ணராஜ்,மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையினர் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த், துணை தலைவர் முத்து, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறிவருகின்றனர்.

Tags

Next Story