புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது

புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது
X
தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியன் (27), வெற்றிவேல் (17) ஆகிய இருவரு ம் இரவு யாருக்கும் தெரியாமல் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் தனியார் இறால் பண்ணையில் மின்சார மோட்டார் இருக்கும் கொட்டகையில் இருந்த காப்பர் கம்பிகளை திருடி நெருப்பில் உருக்கும் போது அதை பார்த்த பொதுமக்கள் மேற்படி இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மீமிசல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா