கோட்டைபட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு
கோட்டை பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு நடத்தி வருகின்றனர்
கோட்டைபட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்திவ் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை, ரோந்து கப்பலால் மோதி உடைத்துள்ளனர்.
இதில் படகு முழுவதுமாக முழ்கியதில், படகு ஓட்டுனர் ராஜ்கிரண் மாயமானார். மற்ற இரு மீனவர்களான சுகந்தன் (23), சேவியர் (32) ஆகியோர் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். தத்தளித்த மீனவர்களை இலங்கை கடற்ப்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று மாயமான மீனவர் ராஜ்கிரண் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகத்திலிருந்து, தமிழக மீன்வளத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், இறந்த ராஜ்கிரணின் உடல் இன்று தமிழகத்திற்க்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்திருந்த உறவினர்கள், மற்றும் மீனவர்களுக்கு பேரிடியாக, ராஜ்கிரணின் உடல் கிடைக்கவில்லை இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் , மீனவர்கள் உடலை தர மறுக்கும் இலங்கை அரசைக் கண்டித்தும், உடலை பெற்றுத்தர நடவடிக்கை மேற்க்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 3-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கத்தினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கோட்டைபட்டினத்தில் தற்பொழுது கடைவீதி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காட்சியளித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu