தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு பரிசளித்து நன்றி கூறிய திமுக வேட்பாளர்

தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு பரிசளித்து நன்றி கூறிய  திமுக  வேட்பாளர்
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் வார்டு 18ல் திமுக சார்பில் போட்டியிட்டு    தோற்ற வேட்பாளர் விசாலாட்சி இன்று வாக்காளர்களுக்கு உள்ளிட்ட பரிசுகளை வழங்கி நன்றி தெரிவித்தார் 

அறந்தாங்கியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கி அதிர்ச்சி ஏற்படுத்தினார்

திமுக சார்பில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் வாக்காளர்களுக்கு பரிசுகள் வழங்கி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி வார்டு-18-ல் போட்டியிட்டு தோல்வியுற்ற திமுக வேட்பாளர் விசாலாட்சி பொதுமக்களுக்கு பேக் வழங்கி நன்றி தெரிவித்தார். அறந்தாங்கியில் மொத்தம் 27-வார்டுகள் உள்ள நிலையில் அதில் திமுக கூட்டணி 20 இடத்திலும் அதிமுக-3 இடத்திலும் சுயச்சை-3 இடத்திலும் தேமுதிக-1 வெற்றி பெற்றுள்ளன.

நிலையில் வார்டு-18-ல் திமுக சார்பில் போட்டியிட்ட விசாலாட்சி 198 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் மங்கையர்கரசி 255 வாக்குகள் பெற்று சொற்ப ஓட்டுகளில் வெற்றி பெற்றார்.மேலும் திமுக வேட்பாளர் கூறுகையி்ல் திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மக்களுக்காக அமைந்துள்ள அரசு இவ்வார்டில் தோல்வியுற்றாலும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு மூலமாக கொண்டு செல்வேன் எகூறி தனக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வீடு வீடாகச் சென்று பேக் பரிசளித்து நூதன முறையில் நன்றி தெரிவித்தார். தோற்று போன திமுக வேட்பாளர் நன்றி தெரிவிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்ட வாக்காளர்கள் தோல்விக்குப் பிறகும் வாக்காளருக்கு பரிசு கொடுத்து நன்றி தெரிவித்தது கண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!