புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிர்வாகியை பாஜகவினர் சந்திப்பு

புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  நிர்வாகியை பாஜகவினர் சந்திப்பு
X

புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகியை சந்தித்த பாஜக நிர்வாகிகள்.

அறந்தாங்கியில் திமுக- பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த பெண் நிர்வாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகியை சந்தித்த பாஜக நிர்வாகிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பல்வேறு நிகழ்வுகளுக்கு வருகை தந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை வரவேற்க திமுக நிர்வாகிகள் அறந்தாங்கி கடைவீதியில் குவிந்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த பாஜக நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் திமுக நிர்வாகிகள் தாக்கியதில் பாஜக பெண் நிர்வாகி உமா மகேஸ்வரி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செல்வம்அழகப்பன் மற்றும் மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் பாஜக நிர்வாகி உமா மகேஸ்வரிக்கு ஆறுதல் கூறினர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பாஜக மற்றும் திமுகவினருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா