இலங்கை கடற்படை தாக்குதல்: கடலில் குதித்து தப்பிக்க முயன்ற மீனவர் உயிரிப்பு

இலங்கை கடற்படை தாக்குதல்: கடலில் குதித்து தப்பிக்க முயன்ற மீனவர் உயிரிப்பு
X

இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு பயந்து  கடலில் குதித்து தப்பிக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ச மீனவர் ராஜ்கிரண்

மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக வெளியான தகவலால் கோட்டைபட்டினம் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

இலங்கை கடற்படை தாக்குதல் கடலில் குதித்து தப்பிக்க முயன்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர் உயிரிழந்ததால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய எல்லை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் (39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகை (எண் TN08 MM 0201) தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி சேதப்படுத்தினர்.இதன் காரணமாக விசைப்படகு கடலில் முற்றிலுமாக மூழ்கியது. படகில் சென்ற மூன்று மீனவர்களில் ராஜ்கிரண் (30) என்ற மீனவர் கடலில் குதித்து மாயமானார். மேலும், கடலில் தத்தளித்த மீனவர்கள் சுகந்தன் (23), சேவியர் (32) ஆகியோரை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.



இதற்க்கிடையில் மாயமான மீனவரை உடனடியாக மீட்டுத்தர கோரியும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையைக் கண்டித்தும் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்க்கரை சாலையில் அப்பகுதி மீனவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த கோட்டைப்பட்டினம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து மீனவர்கள் தற்க்காலிகமாக கலைந்து சென்றனர். இந்நிலையில் தற்போது இலங்கை கடற்படை தாக்குதலின்போது கடலில் குதித்த மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள் ளதால் கோட்டைபட்டினம் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Tags

Next Story