அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய சமூக ஆர்வலர்கள்

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய சமூக ஆர்வலர்கள்
X

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சரிடம் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனைக்கு சமூக ஆர்வலர்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நன்கொடையாளர்கள் வழங்கிய ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகர் அவர்களிடம் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பெருமகள் ஊரைச் சேர்ந்த இண்டிமட் பவுண்டேசன் சார்பில் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு ஆக்சிசன் செறிவூட்டிகளை அதன் நிர்வாக இயக்குனர் பழனிவேல் குழந்தைசாமி வழங்கினார்.

அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான சானிடைசர், மாஸ்க், மாஸ்க் ஆக்சிசன் உள்ளிட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் தங்கதுரை, மருத்துவர் முகமது ரபி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



Tags

Next Story