அறந்தாங்கி அருகே புன்னகை அறக்கட்டளை சார்பில் 3000 பனை விதைகள் நடவு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புன்னகை அறக்கட்டளை சார்பில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி தொகுதி கட்டுமாவடி ஊராட்சி கீழகுடியிருப்பு ஆற்றங்கரையில்3000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதில்கௌரவத் தலைவர் ஜெகன்முன்னிலை வகித்தார், நிறுவன தலைவர் கலைபிரபு, ஊராட்சி மன்ற தலைவர்லோகம்பாள் சிதம்பரம், ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் கோரல் பவுன்டேஷன் ஜோதி,தினையாகுடி ஐயப்பன்,ஊர் தலைவர் முருகையா,முடுக்குவயல் ஊர் தலைவர் பால்சாமி, வார்டு உறுப்பினர் ஐயப்பன், ஊர் நிர்வாகி முருகன், சமுக ஆர்வலர்கள் அய்யாத்துரை, நேருயுவகேந்திரா சிவபாலன், நெய்குப்பை ராஜ்குமார், பிராந்தனி பாக்கியராஜ், ஏகனி வயல் ஐயப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், தோழர் சோலையப்பன், தோழர் கலியமுத்து, மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை தற்பொழுது மரக்கன்றுகள் நடும் பணியிலும் அதிக அளவில் தன்னார்வக் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பனை விதைகள் நடும் பணியில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அதிகளவில் பனை விதைகள் நடுவதற்கு ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu