ஆவுடையார்கோவில் அருகே மின்கம்பியில் உரசி தீப்பற்றிய வைக்கோல் லாரி சேதம்

ஆவுடையார்கோவில் அருகே மின்கம்பியில் உரசி தீப்பற்றிய வைக்கோல் லாரி  சேதம்
X

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பிகளில் உரசி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மினி லாரி கரூர் பகுதிக்கு வந்தபோது, தாழ்நிலையில் இருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசி தீப் பற்றி வேகமாக எரிய தொடங்கியது

ஆவுடையார்கோவில் அருகே மின்கம்பியில் உரசி தீப்பற்றிய வைக்கோல் லாரி சேதமடைந்தது

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, கரூர் கடைவீதியில், ஒக்கூர் பகுதியிலிருந்து தேவகோட்டைக்கு வைக்கோல் ஏற்றிச்சென்ற மினி லாரி கரூர் பகுதிக்கு வந்தபோது, தாழ்நிலையில் இருந்த மின்கம்பியில் வைக்கோல் உரசி தீப் பற்றி வேகமாக எரிய தொடங்கியது.

இதைக்கண்ட, கரூர் கடைவீதியிலுள்ள வியாபாரிகள், பொதுமக்கள், காவல் நிலையத்தினர் தங்கள் கையில் கிடைகத்த குடங்கள் மற்றும் வாளிகள் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர்.

மினி லாரியை ஒட்டி வந்த ஓட்டுனர் காளிமுத்து, அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார். வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பிகளில் உரசி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags

Next Story
ai healthcare products