சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்,சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை இன்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்கள்.
பின்னர்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்காலஅடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டஅனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் பொதுமக்களை கோவிட்தொற்றிலிருந்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் இன்றையதினம் சிலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்சிகிச்சைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றையதினம்அறிவுறுத்தியதை போன்று பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம்அணிதல், கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், சமூகஇடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளகட்டாயம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசிமிகவும் பாதுகாப்பானது.
மேலும் கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதுடன், கோவிட் உயிரிழப்பையும் தவிர்க்கிறது. புதுக்கோட்டை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு கோவிட் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும்வகையில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகள், 8பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்உள்ளாட்சித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறைஉள்ளிட்ட துறைகளுடன் இணைந்து அந்தந்த பகுதிகளில் மருத்துவமுகாம்கள்நடத்தப்படுவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகள் ஊரடங்கு கட்டுபாட்டிற்குள்கொண்டு வரப்படுகிறது.
மேலும் கோவிட் அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு உரியவிழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதலமைச்சர் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மேற்கொண்டு வரும் துரித நடவடிக்கையின் காரணமாககோவிட் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பொதுமக்களை பாதுகாக்கின்றபணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது .இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், பொதுசுகாதாரத் துணை இயக்குநர் விஜயகுமார்உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu