பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் : அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்

பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நட வேண்டும் : அமைச்சர் மெய்யநாதன்  வலியுறுத்தல்
X
மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார் அமைச்சர்

தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட வேண்டும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் பெருமாள் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று தொடக்கி வைத்தார். பின்னர் அமைச்சர்மெய்யநாதன் பேசியதாவது: தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணிகளில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் அனைவரும் ஈடுபட வேண்டும். இதன்மூலம், அனைவரும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.

முன்னதாக, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் தொடக்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் முன்னிலையில் நடைபெற்ற. நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், ஊராட்சிமன்றத் தலைவர் ராணி ராஜா, சிலட்டூர் தங்கவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்