காவலர்களுக்கு மதிய உணவு வழங்கிய ரோட்டரி சங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தைஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் காவல்த்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டக் காவல்த்துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தற்ப்போது கொரொனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவகிறது.அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசின் சார்பில் சிலக் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவர்கள், காவல்த்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர்கள் பொது மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தொற்றுத் தடுப்புப் பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் காவல்த்துறையினருக்கு 200 க்கும் மேற்ப்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் இது போன்று மற்றத்துறையினருக்கும் தொடர்ந்து உணவு வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் காவல்த்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
#இன்ஸ்டாசெய்தி #தமிழ்நாடு #புதுக்கோட்டை #அறந்தாங்கி #ரோட்டரி #சங்கம் #போலீசார் #உணவு #வழங்கல் #Insta News #TamilNadu #Pudukottai #Aranthangi #Rotary #Sangam #Police #Food #Distribution #free #freefood
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu