ஆவுடையார்கோயில்ஒன்றியக்குழுகூட்ட அரங்கிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி படம் அகற்றம்

ஆவுடையார் கோயில் ஒன்றியக் குழுக் கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அகற்றம்
ஆவுடையார்கோவில் ஒன்றிய குழுக்கூட்டத்தில் கூட்டரங்கில் இருந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி படம் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரப்பன் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போது, திமுக கவுன்சிலர் சிவசங்கர் குறுக்கிட்டு கூட்டரங்கில் இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை அகற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது, குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர்கள் பாலசுந்தரி, பாண்டி ஆகிய இருவரும், சிவசங்கரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படத்தை அகற்றக்கூடாது என்று பேசியதால், கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது ஒன்றியக்குழு தலைவர் உமாதேவியின் உத்தரவிற்கிணங்க, கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம் அகற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த, அதிமுக கவுன்சிலர்கள் பாலசுந்தரி, பாண்டி ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu