அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்
X

அறந்தாங்கி ரோட்டரி சங்கம்  சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பை வழங்கியது.

அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு கொரோனா நிவாரண தொகுப்பை வழங்கினர்.

வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தட்டு வண்டி ரிக்ஷா ஓட்டுநர்கள் சுமார் 200 குடும்பங்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பு வழங்கப்பட்டதுபட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்ப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் தட்டு வண்டி ரிக்ஷா ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியோடு பொருட்களை பெற்றுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல்துறை அதிகாரிகள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!