மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்வள மசோதாவைக்கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்வள மசோதாவைக்கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்
X

மீன்வள மசோதாவை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுட்ட மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் 

மீன்வள மசோதாவை கைவிட வலியுறுத்தி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மீன்வள மசோதா(2021) வைக்கைவிட வலியுறுத்தி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மக்கள் விடுதலை இயக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் க.சி. விடுதலை குமரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மீன்பிடி தொழிலில் இருந்து மீனவர்களை வெளியேற்றிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் கப்பலில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்காக, ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 2021 மீன்வள மசோதாவை கைவிட வலியுறுத்தி, வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மக்கள் விடுதலை இயக்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai and future cities