விசாரணைக்கு வந்தவர் கன்னத்தில் காவலர் பளார்: பரபரப்பு...

விசாரணைக்கு வந்தவர்  கன்னத்தில் காவலர் பளார்: பரபரப்பு...
X

போலீஸ் அறைதல் கார்ட்டூன் படம்

அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்தவரை காவலர் ஒருவர் கன்னத்தில அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ரத்தின கோட்டை கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் இருவரின் இடப்பிரச்சினை சம்பந்தமாக ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 10-ஆம் தேதி மாலை அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு ராதாகிருஷ்ணன் வந்துள்ளார்.

மேலும் அப்போது விசாரணை செய்த காவலர் முருகன் ராதாகிருஷ்ணன் கூறுவதை கேட்காமல் தகாத வார்த்தைகளால் திட்டியும் கன்னத்தில் அறைந்துள்ளார்.

காவலர் கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சல் அடைந்த ராதாகிருஷ்ணன் 12-ஆம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

புகாரின் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சம்பந்தப்பட்ட காவலர் முருகன் என்ற காவலரை ஆயுதப்படை பணிக்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் தற்போது அதே காவலர் முருகன் விசாரணைக்கு வந்த முதியவரை தகாத வார்த்தைகள் கூறியும் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பாளரால் தண்டிக்கப்பட்ட அதே காவலர் மீண்டும் அதே தவறை செய்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று மக்கள் அந்த காவலர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா