அறந்தாங்கியில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்தவர்களிடம் போலீசார் விசாரணை

அறந்தாங்கியில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்தவர்களிடம் போலீசார் விசாரணை
X

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் பிச்சை எடுத்தவரிகளிடம் போலீசார் விசாரணை

இது குறித்து, சில சமூக ஆர்வலர்கள், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே குழந்தையை காட்டி பிச்சை எடுத்தவரை மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயல் கிராமத்தை சேரந்த நூர்ஜஹான் என்ற வயதான பெண் ஒன்றரை வயது பெண் குழந்தையை காண்பித்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இது குறித்து, சில சமூக ஆர்வலர்கள், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வைரம், பேருந்து நிலையத்தில் ஔிந்து கொண்டிருந்த நூர்ஜஹானை குழந்தையுடன் கையும் களவுமாக பிடித்தனர். நூர்ஜஹான் மற்றும் அவரது உறவினர்களை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்தனர். ஒரு வயது பெண் குழந்தை ரதீனா தனது மகன் மாவீரன் மற்றும் மருமகள் நமீனா அவர்களது குழந்தை என்று கூறியுள்ளார். இது குறித்த மேலும் உதவி ஆய்வாளர் வைரம் கூறுகையில் குழந்தையை வைத்து பிச்சை எடுத்தவர்கள் கூறியுள்ள தகவல்களை வைத்து குழந்தையின் பெற்றோர்களை அழைத்து நன்கு விசாராணை செய்த பிறகே அவர்களை விடுவிப்பது குறித்து தெரிய வரும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!