மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம் : தேடும் பணி தீவிரம்

மீன்பிடிக்கச் சென்ற  மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம் : தேடும் பணி தீவிரம்
X

வசீகரனை தேடும் பணிக்கு புறப்படும் படகுகள்.

புதுக்கோட்டையில் மீன் பிடிக்கச் சென்ற மீனவ இளைஞன் கடலில் தவறி விழுந்து மாயமானார். அவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார்.அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடலில் விழுந்து மாயமான வசீகரன்.

கொடிக்குளம் ஊராட்சி வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்திலிருந்து தினமணி என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் தினமணி (46), வசீகரன் (19) மணிகண்டன் (23) ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீனவர் வசீகரன் படகின் எஞ்ஜின் பக்கம் அமர்ந்து கொண்டு வலையில் உள்ள மீன்களை ஆய்ந்துள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக வலை எஞ்ஜின் மீது சிக்கி,வலையோடு வசீகரன் தூக்கி வீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்ட வசீகரன் எஞ்ஜின் மீதே மோதி தலை பகுதியில் லேசானக் காயத்துடன் நீரில் மூழ்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததையடுத்து, கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் கடலோரக் காவல் படையினர் மற்றும் சக மீனவர்களின் உதவியோடு இரண்டு விசைப்படகு மற்றும் 8 -க்கும் மேற்ப்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் தேடும் பணிகள் தீவிரம்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 19 வயது மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா