மீனவரின் உடலுக்கு சட்டஅமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அஞ்சலி

மீனவரின்  உடலுக்கு  சட்டஅமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அஞ்சலி
X

இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் அறிவித்த நிவாரண உதவியை குடும்பத்தினரிடம் வழங்கிய அமைச்சர் எஸ். ரகுபதி.

இறந்த மீனவர் ராஜ்கிரண் உடலை, இலங்கை கடற்படையினர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்

இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதாராமு ஆகியோர் நேரில் சென்று வழங்கிய அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ஆம் தேதி 118 விசைப் படகுகளில் 500 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில், சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ராஜ்கிரண், சுகுந்தன், சேவியர் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, இவர்களது படகின் மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் படகு மூழ்கி விட்டது. கடலில் தத்தளித்த மீனவர்கள் சுகந்தன் ,சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர்.

மேலும், படகில் இருந்து கடலுக்குள் விழுந்து காணாமல் போன மீனவர் ராஜ்கிரணை கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்தனர் இந்நிலையில் மீனவர் ராஜ்கிரணின் உடலை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலில் இறந்துபோன மீனவர் ராஜ்கிரன் உடலை உடனடியாக கொட்டைப்பட்டினம் கொண்டு வரவேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சுகுந்தன் சேவியர் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இறந்த மீனவர் ராஜ்கிரண் உடலை, இலங்கை கடற்படையினர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்று மதியம் ஒரு மணி அளவில் ராஜ்கிரண் உடல் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிகாகாக வைக்கப்பட்டது. மீனவர் ராஜ்கிரணின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, தமிழக அரசு அறிவித்த 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினர்.

பின்னர், கோட்டைப்பட்டினம் மீன்பிடிப்பு தளத்திலிருந்து ராஜ்கிரன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜ்கிரணின் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக அவருடைய மனைவி மற்றும் தாயார் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று கதறி அழுத காட்சி அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி