அறந்தாங்கி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி நகர் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனையில் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரகுதி, ஆலங்குடி திமுக சட்டமன்ற உறுப்பினருமான சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டனர்..

இந்த ஆய்வின்போது அறந்தாங்கி தலைமை மருத்துவர் சேகர் உடனிருந்தார் ஆய்வின்போது மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் அவர்களுக்கு எவ்வாறு உணவு வழங்கப்படுவது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில்.

கரோனா வைரஸ் நோயினால் தாக்கப்பட்டு உள்ளவர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளும் சரியான முறையில் மருத்துவங்கள் செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.

மேலும் மாவட்டத்தின் மிகப்பெரிய நகராட்சியான இந்த அறிஞர் அண்ணா அரசினர் மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக ஆக்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு அல்லாமல்,

அதன் தரத்தையும் உயர்த்தி அதற்கு தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் முறையாக தகவல் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை கூடிய விரைவில் செய்ய உள்ளேன் எனவும் கூறினார்.

Tags

Next Story