மணமேல்குடி பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 150 கிலோ குட்கா பறிமுதல்

மணமேல்குடி பகுதியில்   பதுக்கி  வைத்து விற்பனை செய்த 150 கிலோ குட்கா பறிமுதல்
X

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா    பொருட்களை விற்பனை செய்த  மூன்றுபரை கைது செய்து  அவர்களிடம் இருந்து பறிமுதல்  செய்யப்பட்ட குட்கா பான் மசாலா  பொருள்கள் பெட்டி பெட்டியாக  கைப்பற்றப்பட்டது

மணமேல்குடி பகுதியில்பதுக்கி வைத்து விற்பனை செய்த 150 கிலோ குட்கா பறிமுதல் மாவட்டம், கோட்டைப்பட்டிணம் உட்கோட்டம் மணமேல்குடிகாவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவலதுறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஒரு குழுவாக நடத்திய அதிரடி சோதனையில்.

கட்டுமாவடி கடைத்தெருவில் உள்ள பெனாசிர்கான் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை குடோனில சுமார் 111 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும், மேலும் அப்பொருட்களை பதுக்கள் உதவிய ரியாஸ், ஆகியோரை கைது செய்தனர்.

மேலும். அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது ஷாஜகான் என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் சுமார் 34 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் அப்பொருட்களை விற்பனை செய்ய பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 150 கிலோ குட்கா பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினார்.

மேலும் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை கைப்பற்றி நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டுக்களை தெரிவித்தார்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா