கற்போம் எழுதுவோம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி :அறந்தாங்கி கோட்டாட்சியர் தொடக்கம்

கற்போம் எழுதுவோம்  விழிப்புணர்வு  கலைநிகழ்ச்சி :அறந்தாங்கி கோட்டாட்சியர் தொடக்கம்
X

அறந்தாங்கி ஒன்றியத்தில் கற்போம் எழுதுவோம் சமுதாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை அறந்தாங்கி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.

அறந்தாங்கி ஒன்றியத்தின் 35 மையங்களில், கற்போம் எழுதுவோம் கற்றல் மையங்களில்710 பேர் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டனர்

அறந்தாங்கி ஒன்றியத்தில் கற்போம் எழுதுவோம் சமுதாய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை அறந்தாங்கி கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவுரைப்படியும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும் அறந்தாங்கியில் உள்ள அண்ணா சிலை அருகே கற்போம் எழுதுவோம், பள்ளி சாரா மற்றும் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் சார்பாக கற்றலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சியை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தொடங்கி வைத்தார். அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் முன்னிலை வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அருள் , முத்துகுமார் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், கல்வியின் அவசியம் குறித்து விரிவாகப் பேசினார். முதற்கட்டமாக, அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உள்பட்ட 35 மையங்களில், கற்போம் எழுதுவோம் கற்றல் மையங்கள் செயல்பட்டு வந்தன. இதில்710 பேர் படிக்கவும் எழுதவும் அடிப்படை திறன்களை கற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், கலைக்குழுவினர் மூலமாக பொதுமக்களிடையே கல்வியின் அவசியத்தையும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் கொரனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் பிரசாரம் செய்தனர்.

இந்நிகழ்வில், மிகச்சிறப்பாக கலைக் குழுவில் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும், அறந்தாங்கி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆலங்குடி ஆசிரியர் மாணிக்கம் கலந்து கொண்டார். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஈஸ்வரன் நன்றி கூறினார். இந்நிகழ்வில், ஆசிரியர் பயிற்றுனர்கள் செல்வராஜ், சரவணன், சசிகுமார், ஈஸ்வரன், கோமதி ,சியாமளா பியூலா, சாந்தி நீலவேணி, கவிதா ,பார்வதி மகேஸ்வரி சிறப்பாசிரியர்கள் செந்தில் ,சசிகலா பெரியநாயகி, ரேவதி இயன்முறை மருத்துவர் சரவணன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தர்மராஜ் சத்யதாஸ் , சேர்மன் தனம் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story