கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாலுக்கு நாள் விண்னை முட்டுகின்ற அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவதால், மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

எனவே பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை கார்பரேட் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதை தடுத்து நிறுத்தி, மீண்டும் பழைய முறைப்படி மத்திய அரசே செயல்படுத்த வேண்டும், அந்நிய சந்தைகளில் அந்தந்த மாநில அரசுகளே கொள்முதல் செய்து விலை குறைத்து விற்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும், மீனவர்களுக்கு வழங்கக்கூடிய டீசலுக்கு முற்றிலும் வரி சலுகை செய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டனர்.

மேலும் மீனவர்கள் பிடிக்கின்ற இறால், நண்டிற்கு, இறால் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்கிறது, இதனால் மீனவர்கள் மிகுந்த இழப்பை சந்திக்கின்றனர். இதனால் கடந்த ஏப்ரல் 16ம்தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை மீன் பிடித்தடைக்காலம் முடிந்தும் மீனவர்கள் இதுவரை கடலுக்கு செல்லாமல் உள்ளோம், இதற்கு அரசே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்


Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil