இறந்த மீனவரின் உடலையும் 2 மீனவர்களையும் மீட்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

இறந்த மீனவரின் உடலையும் 2  மீனவர்களையும் மீட்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
X

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்கள்

மத்திய, மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கின்றனர்

இறந்த மீனவரின் உடலையும் இரண்டு மீனவர்களையும் மீட்டுத் தர வலியுறுத்தி தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம்.

கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த மீனவர்கள் சேவியர் மற்றும் சுகந்தன் ஆகிய இருவரையும் கடந்த திங்கட்கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று ராஜ்கிரன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, மீனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் ஆறு மணி நேரத்தைக் கடந்தும், இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு முறையான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டு கின்றனர். மத்திய, மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் வேறுவிதமாக நடைபெறும் என மீனவ போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது பிரதான கோரிக்கையாக உள்ள ராஜ்கிரண் குடும்பத்திற்கு அரசு வேலையும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், தாக்கப்பட்ட மீனவர்களுக்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும். உயிருடன் உள்ள மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு மீட்டு கொண்டுவர வேண்டும்.இனி போல் இது சம்பவம் நடக்காமல் இருக்க அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!