அறந்தாங்கியில் 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

அறந்தாங்கியில் 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்  அடிக்கல் நாட்டு விழா
X
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் தொழுவன் காடு கிராமத்தில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

தொழுவன் காடு கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி விழாவை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் அறந்தாங்கி ஒன்றிய குழுத்தலைவர் பரமேஸ்வரி சண்முகநாதன் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிசுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!