வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட வனத்துறையினர்

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட வனத்துறையினர்
X

புதுக்கோட்டை அருகே மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட வனத்துறை அதிகாரிகள்

மாவட்டத்தின் கடல் பகுதிகளில் சித்தாமை வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருப்பதை இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது என்றனர்

மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்ட வனத்துறை அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, தெற்குபுதுக்குடியிருப்பு மீனவ கிராமத்தில் திரு பசுபதி என்ற மீனவர் தனக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்தபோது மீன்பிடி வலையில் அரிய வகை சித்தாமை ஒன்று சிக்கியுள்ளது. உடனே அந்த மீனவர் வனத்துறையிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அறந்தாங்கி வனச்சரக அலுவலர் .சதாசிவம், மணமேல்குடி பிரிவு வனவர்கள் ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி, தற்காலிக பாதுகாப்பு காவலர் முத்துராமன், சைமன் ஆகியோர் வலையில் சிக்கிய அரிய வகை ஆமையை பாதுகாப்பாக கடலில் மீனவர்களின் உதவியுடன் படகில் சென்று கடலில் விட்டனர்.

பாதுகாப்பாக விடப்பட்ட சித்தாமை கடலில் நல்ல நிலையில் நீந்தி தனது வாழ்விடம் நோக்கி சென்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடல் பகுதிகளில் சித்தாமை காணப்படுவது என்பது இங்கு அதற்கு ஏற்ற வாழ்விடம் இருப்பதை இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது. இம்மாவட்டத்தில் ஆழம் குறைவான கடற்பகுதிகளில் கடற்புற்கள் அதிகப்படியாக காணப்படுவதால் உணவு தேடி இப்பகுதிககு சித்தாமை வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், படி சித்தாமை பாதுகாக்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் வன உயிரினமானகும்.

இவற்றை வேட்டையாடுவது அல்லது தீங்கு விளைவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுவோர்க்கு வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972, பிரிவு 51-ன் படி மூன்று வருடத்திற்கு குறையாமல் ஏழு வருடம் வரை சிறைத்தண்டையும் மற்றும் ரூ.10,000க்கு குறையாத அபராதமும் விதிக்க வழி வகை உள்ளது. எனவே கடல்பசு, கடல்குதிரை, கடல்பல்லி, கடல்அட்டை, சித்தாமை, டால்பின், திமிங்களம் போன்ற கடல் வாழ் வன உயிரினங்களை பாதுகாக்க மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கோரி வனத்துறை மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story