கிராமிய நாட்டுப்புறப் பாடலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பாடி அசத்திய மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவன் காளிதாஸ் மாவட்ட ஆட்சியர் முன் கிராமிய நாட்டுப்புற பாடலை பாடி அசத்தினார்
ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு வரலாற்றுத் துறையில் படிக்கும் மாணவன் காளிதாஸ் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பாரம்பரியமான நாட்டுப்புறப் பாடலை பாடி அசத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்றுத் துறையில் படித்து வருபவர் காளிதாஸ். இவருக்கு சிறுவயது முதலே நாட்டுப்புற பாடல்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு திருவிழா காலங்களில் கிராமப்புறங்களில் நடைபெறும் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாட்டுப்புறப் பாடல்களை பாடி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் புதுக்கோட்டை ஒருங்கிணைந்த கல்வி மாவட்டத்தின் சார்பில் காளிதாஸ் நாட்டுப்புறப் பாடல்கள் போட்டியில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களைப்பாடி மாநிலத்திலேயே 2-ம் இடம் பிடித்து அசத்தி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஏற்கெனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கவிதா ராமு பரதநாட்டியம் நாட்டுப்புற கிராமிய பாடல்கள் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால், இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவன் காளிதாஸ்சை அழைத்து நாட்டுப்புற பாடல்கள் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றதற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். பின்னர் மாணவன் காளிதாசை நாட்டுப்புற பாடலை பாட வைத்து கேட்டு மகிழ்ந்தார்.
நாட்டுப்புறப் பாடல்களை பாடி அசத்திய காளிதாசை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu