முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

அறந்தாங்கியில் ரோட்டரி சங்கம் சார்பில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தற்ப்போது வேகமாக பரவி வரும் இரண்டாவது அலை கொரொனாவால் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலையின்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கும் முடி திருத்தும் தொழிலாளர்கள் 250 குடும்பங்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

பட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மார்டின் லூதர்கிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 250க்கும் மேற்ப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியோடு பொருட்களை பெற்றுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!