முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அமைச்சர்

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அமைச்சர்
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழக முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அறந்தாங்கி முதியோர் இல்லவாசிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு வழங்கினார்

தமிழக முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உணவு வழங்கினார்.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் திமுக தலைவருமான தமிழக முதல்வர் ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஒத்தக்கடை பகுதியில் நமது இல்ல அறக்கட்டளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் காலை வேளைக்கு இனிப்பு, சிற்றுண்டியும், மதிய உணவும் முதியோர்களுக்கு சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கி திமுக தலைவர் பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக முதியோர் இல்ல வளாகத்தில் மரக்கன்று நட்டு வைதக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நற்பவளக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழியன், தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலர் கவிவர்மன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!