தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசின் மென்மையான போக்கு தவறு: நவாஸ்கனி எம்பி
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் நடைபெற்றுவரும் மீனவர்கள் போராட்டத்திற்கு வருகை தந்த ராமநாதபுரம் நாடாளுமன்றஉறுப்பினர் நவாஸ்கனி மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு மென்மையான போக்கை கையாள்வது சரியான அணுகுமுறை கிடையாது என்றார் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை ரோந்து கப்பலை வைத்து மோதி 2 மீனவர்களை கைது செய்தும் ஒரு மீனவரை படுகொலை செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்தும் உடனடியாக உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு கொண்டுவர வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து அழைத்து வரவேண்டும் உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு உரிய முறையில் இழப்பீடு தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோட்டைப்பட்டினம் மட்டுமல்லாமல் ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி போராட்டக் களத்திற்கு வருகை தந்து மீனவர்களின் கோரிக்கை குறித்தும் கலந்து கொண்டு உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி மீனவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்பி நவாஸ்கனி மேலும் கூறுகையில்: தமிழக மீனவர்கள் பிரச்னையில் இலங்கை அரசை கண்டிக்காமல் ஒன்றிய அரசு மென்மையான போக்கை கையாள்வது சரியான அணுகுமுறை கிடையாது, மீனவர் பிரச்னையில் உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறேன். தற்போது கோட்டை பட்டணத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் ஆசிட் ஊற்றி கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது கடுமையான கண்டனத்துக்குரியது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் அவர்களை கைது செய்யலாம். ஆனால். சட்டத்திற்கு புறம்பாக மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்து வருவது நியாயமற்றது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட மீனவர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu