ஆவுடையார் கோவிலில் மணல் குவாரி அமைக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

ஆவுடையார் கோவிலில் மணல் குவாரி அமைக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
X

ஆவுடையார் கோவிலில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவுடையார் கோவில் பகுதியில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒக்கூர் முகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு ஆவுடையார்கோவில் பகுதியில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆவுடையார்கோவில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார் கோவில் அருகே உள்ள வெள்ளாறு, பாம்பாறு மற்றும் கொழுவன் ஆறு போன்ற பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு அரசு வழிவகை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!