/* */

மீமிசல் வணிக வளாகத்தில் உள்ள 8 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபர்கள் வந்து சென்ற காட்சிகளை மீமிசல் போலீஸார் ஆய்வு செய்து வருகினறனர்

HIGHLIGHTS

மீமிசல்  வணிக வளாகத்தில் உள்ள 8  கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
X

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் திருட்டு நடந்த வணிக வளாகம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மீமிசலில் 8 -க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் இயங்கி வருகிறது, இதில் மளிகை கடை, மருந்தகம் உள்ளிட்ட 12 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையின் உரிமையாளர்கள் வழக்கமாக கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.


இதையடுத்து, நள்ளிரவு 1 மணியளவில் அஙகு வந்த மர்ம நபர்கள் அங்குள்ள மளிகைக்கடை, மருந்தகம், பேன்ஸிஸ்டோர் போன்ற கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் மளிகை பொருட்கள், கணினி, ட்ரில்லிங் இயந்திரம், சிசிடிவி கேமராவிக்கான டிவிஆர் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

அதேபோல், சேமங்கோட்டை பகுதியில் உள்ள மளிகைக் கடையிலும் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, அருகே இருந்த சிசிடிவி கேமராவில் மர்ம நபர்கள் வந்து சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. பதிவானக் காட்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் மீமிசல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாள் இரவில் 8 -க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Updated On: 17 Sep 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...