அறந்தாங்கி: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் பலி

அறந்தாங்கி: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண்  பலி
X
மழை பெய்து வருவதால் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழும் சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மறமடக்கியில் மதியழகன் என்பவரது மனைவி தமிழ்ச்செல்வி(50) என்பவர், தனது தோட்டத்தில் புல் அறுக்க சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்ததில், மின்சாரம் தாக்கி பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மறமடக்கியில் தமிழ்செல்வி ( 50) என்பவர் தனது வீட்டில் இருந்து பரவாக்கோட்டை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான கடலை கொல்லைக்கு சென்று புல் அறுத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அறந்தாங்கி காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழும் சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், மின்வாரியமும் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா