அறந்தாங்கி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிவாரண உதவிகளை வழங்கினார்

அறந்தாங்கி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிவாரண உதவிகளை வழங்கினார்
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகளை  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கிய போது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கி பேசியதாவது..

தமிழக முதல்வர் தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார். மேலும் நோய் தொற்று காலங்களில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் கோவிட் நிவாரண உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் பொதுமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களும் மற்றும் காவல் நிலையங்களுக்கு தேவையான முகக்கவசம், சேனிடைஸ்சர் உள்ளிட்ட கோவிட் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறந்தாங்கி வடக்கரை முருகன் கோவில் அருகில் ரோட்டரி சங்கம் சார்பிலும், பள்ளிவாசல் மற்றும் கலைஞர் மன்றத்திலும் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஆக்கப்பூர்வமான வகையில் மேற்கொண்ட கோவிட் தடுப்பு நடவடிக்கையின் பயனாக தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

இருந்த போதிலும் தமிழகத்தை கோவிட் தொற்று இல்லாத நிலையை விரைந்து ஏற்படுத்திட தமிழக முதல்வருக்கு உறுதுணையாக பல்வேறு தனியார் அமைப்புகளும் கோவிட் தடுப்பு நடவடிக்கையில் இதுபோன்ற உதவிகளை செய்து வருவதற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.. இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!