அறந்தாங்கியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி 200 ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு அமைச்சர் வழங்கல்

அறந்தாங்கியில்  கருணாநிதி பிறந்த நாளையொட்டி 200 ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பு அமைச்சர் வழங்கல்
X
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா, அமைச்சர் ரகுபதி  ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 200 ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகுப்பை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வாடகை பேருந்து ஓட்டுனர்கள் 200 நபர்களுக்கு 2 லடசம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக பொதுக்குழு உறுப்பினர் கலைமணி ஏற்ப்பாட்டில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சட்டத்துறைஅமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து சத்தியமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோன தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.



மேலும் அறந்தாங்கி இஸ்லாமிய மன்றம் சார்பில் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை வட்டார மருத்துவ அலுவலர் முகமதுஇத்ரீஸிடம் , சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஆனந்த், தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன், மணமேல்குடி ஒன்றியச் செயலாளர் சக்திராமசாமி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்