அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு உதவி
X

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

அறந்தாங்கியில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வரும் இரண்டாவது அலை கொரொனாவால் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலையின்றி வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் வேலையின்றி வீடுகளில் முடங்கியிருக்கும் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சுமார் 200 குடும்பங்களுக்கு அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் அரிசி காய்கறிகள் வழங்கப்பட்டது.

பட்டயத் தலைவர் தங்கதுரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியோடு பொருட்களை பெற்றுச் சென்றனர்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி தாசில்தார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!