பஸ் - லாரி மோதி விபத்து: லாரி ஓட்டுநர் பலி; 16 பேர் காயம்

பஸ் - லாரி மோதி விபத்து:  லாரி ஓட்டுநர் பலி; 16 பேர் காயம்
X

அறந்தாங்கி அருகே விபத்துக்குள்ளான பஸ் - லாரி.

அறந்தாங்கி அருகே, பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்; 16 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த குன்னக்குரும்பி என்னுமிடத்தில் திருப்பூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்த அரசு பேருந்தும் அறந்தாங்கி இருந்து நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக குன்னகுரும்பி என்னும் இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே லாரி ஓட்டுனர மகதீர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அரசு பேருந்தில் படுகாயம் அடைந்த 16 நபர்கள் முதற்கட்டமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உறவினர்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு கூடியதால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது

லாரி டிரைவரின் உடல் நசுங்கி மோசமான நிலை ஏற்பட்டதால் அறந்தாங்கி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரி டிரைவர் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் படுகாயமடைந்த நபர்களை மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!