புதுக்கோட்டை அருகே உறுதி ஊர்வல வாகனத்தில் மின்சாரம் தாக்கிய விபத்து, ஓட்டுனர் பலி

புதுக்கோட்டை அருகே உறுதி ஊர்வல வாகனத்தில் மின்சாரம் தாக்கிய விபத்து, ஓட்டுனர் பலி
X
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆயிங்குடி அருகில் பட்டினக்காடு கிராமத்தில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் ரதத்தின் மேல் பகுதியில் மின்சாரம் தாக்கி ரத ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமம் உள்ளது இந்த ஆயிங்குடி கிராமத்தை ஒட்டிய பகுதியில் பட்டினகாடு எனும் பகுதி உள்ளது. இந்த கிராமத்தில் சுப்பையா என்பவர் இறந்து விட்டார் அவரது உடலை வீட்டிலிருந்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு நான்கு சக்கரவாகனமான சொர்க்கரதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சொர்க்கரதம் தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(30) என்பவர் ஓட்டி வந்தார். சுப்பையா வீட்டில் இறுதி காரியம் முடித்து அவரது உடலை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் வேலையில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

பின்னர் ஓட்டுனர் சக்திவேல் உடலை இறக்கி வைத்து விட்டு அதே வாகனத்தை ஓட்டி வந்து இறந்தவரின் வீட்டில் இருந்த ஃப்ரீசர் பெட்டியை எடுத்து விட்டு அவரது சொந்த ஊருக்கு திரும்பும் போது இறந்தவர் வீடு அருகே மிக தாழ்வாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி ரதத்தின் மேல் பகுதியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சொர்க்கரத ஓட்டுனர் சக்திவேல் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சக்திவேல் உடலானது பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்