நீரில் மூழ்கிய 30 ஏக்கர் நெற்பயிர்கள்: அதிகாரிகள் பார்வையிட விவசாயிகள் கோரிக்கை

நீரில் மூழ்கிய 30 ஏக்கர்  நெற்பயிர்கள்: அதிகாரிகள் பார்வையிட விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் நல்ல நிலையில் விளைந்திருந்த நெற்பயிர்கள மழைநீர் சூழ்ந்ததால் அழுகும் தருவாயில் உள்ளதாக  விவசாயிகள் வேதனை 

கண்மாய் நிரம்பியதால் உள் வரத்து பகுதி அருகே அமைந்துள்ள சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கின

30 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியத்திற்க்குள்பட்ட வேட்டணிவயல், கருப்பக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட விளை நிலங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். நெல் விதைப்பு செய்து 15 நாட்களை கடந்த நிலையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ச்சியடைந்திருந்தது. இந்த விவசாய நிலங்கள் தண்டலைக் கண்மாயின் உள் வரத்து பகுதியில் அமைந்துள்ளது.

தற்போது நடைபெற்று முடிந்த குடிமராமத்து பணியின்போது, தண்டலைக் கண்மாயிலிருந்து பாசன வசதி பெரும் விவசாய நிலங்களின் வறட்சியைத் தடுப்பதற்காக, அந்த கண்மாயில் சருக்கையை 2 அடி உயர்த்திக் கட்டப்பட்டது. இப்பகுதியில், சமீபத்தில் பெய்த மழையில் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டியதால், உள் வரத்து பகுதி அருகே அமைந்துள்ள சுமார் 30 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட விளை நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விளை நிலங்களில் தேங்கிய நீரை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story