டிராக்டர் ஓட்டிய அமைச்சர்- பொதுமக்கள் வியப்பு

டிராக்டர் ஓட்டிய அமைச்சர்- பொதுமக்கள் வியப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் டிராக்டர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர் வாகனத்தை ஓட்டிக் கொண்டு அதில் கட்சி நிர்வாகிகளை ஏற்றிக்கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். இதனை பார்த்த பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் அமைச்சர் டிராக்டரை ஓட்டிக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்ததை ஆச்சரியத்துடன் வியந்து பார்த்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!