கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்
X

வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள ஜில்லென்று மோர் வழங்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்களை அனைவரும் பாராட்டினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகர் பகுதி வாக்காளர் பொதுமக்களுக்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருமேனி, சிவசக்தி பாண்டியன் மகாலிங்கம், பாலு உள்ளிட்டோர் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் மோர் வழங்கி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மோர் வாங்கி அருந்திய பின்னர் வாக்களிக்க சென்று வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரும் வாக்காளர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மோர் வழங்கி வருவது அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!